இந்தியா

இந்த ஆண்டு 192 முறை பாக். அத்துமீறல்

பிடிஐ

மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பி. சவுத்ரி நேற்று எழுத்து மூலம் அளித்த பதில்:

ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லைப் பகுதியில் இந்த ஆண்டு கடந்த ஜூலை 26-ம் தேதி வரை 192 முறை பாகிஸ் தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் பொதுமக்கள் 3 பேர் மற்றும் பிஎஸ்எப் வீரர் ஒருவர் இறந்துள்ளனர், 22 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் 7,110 பேர் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 50 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பாகிஸ்தான் தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத் தினருக்கு மத்திய அரசு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அளிக்கிறது. இதுதவிர மாநில அரசும் நிவாரணம் அளிக்கிறது.

கடந்த ஆண்டு பாகிஸ்தான் 430 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 12 பேர் மற்றும் பிஎஸ்எப் வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். இதனால் 2.08 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT