இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீடு சலுகையைப் பெற வருமான உச்ச வரம்பு (கிரீமிலேயர்) நிர்ணயிக்கப்பட் டுள்ளது. அதேநேரம், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கிரீமிலேயர் முறை பொருந்தாது.
இந்நிலையில், ஜர்னைல் சிங் வழக்கில் , எஸ்சி, எஸ்டி பிரிவின ருக்கும் கிரீமிலேயர் முறை பொருந் தும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசா ரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணு கோபால், “இந்திரா சாவ்னே (மண்டல்) வழக்கில் 5 நீதிபதிகள் அமர்வு கடந்த 2008-ல் தீர்ப்பு வழங்கியது.
அதில், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கிரீமிலேயர் முறையை அமல்படுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொள்ளாமல் ஜர்னைல் சிங் வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர். கிரீமிலேயர் முறையிலிருந்து எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விலக்கு அளிக்க வேண்டும். எனவே, இந்த மனுவை 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்றார். இதையடுத்து விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது