விவசாயிகள் மற்றும் பழங்குடியினரின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள புல்லட் ரயில்திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யப்பப்போவதாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேகூறியதாவது:
நீங்கள் இப்போது கேட்டது போல, நிச்சயமாக, புல்லட் ரயிலை (திட்டம்) மறுஆய்வு செய்வோம். ஆரே மெட்ரோ கார் ஷெட் போன்ற புல்லட் ரயில் திட்டத்திலா நான் இருக்கிறேன்? கண்டிப்பாக இல்லை. ஏனெனில் இந்த அரசாங்கம் சாமானிய மக்களின் அரசாங்கம்.
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் உட்பட மாநிலத்தில் நடந்து வரும் அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களையும் மறுபரிசீலனை செய்வோம். மக்களுக்கு என்ன தேவையோ அவற்றில் கவனம் செலுத்துவோம்.
மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து மாநில அரசும் வெள்ளை அறிக்கை வெளியிடும். விவசாயிகளுக்கு நிபந்தனையற்ற கடன் தள்ளுபடி செய்வதில் உறுதியாக உள்ளது.
மாநிலத்தில் முந்தைய பாஜக தலைமையிலான அரசாங்கம் அளித்துவந்த முன்னுரிமைகள் - அதில் எங்கள் கட்சி ஒரு அங்கமாக அப்போது இருந்தது - ஆனால் இப்போது இடம் மாற்றப்பட்டுள்ளதால் அவை எதுவும் இப்போது இருக்காது.
இவ்வாறு மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.