மகாராஷ்டிராவில் 4 வயதுக் குழந்தையிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட நபரை நகர வீதிகளில் நிர்வாண ஊர்வலமாக செல்லும் தண்டனையை விதித்துள்ள சம்பவம் நேற்று மாலை நாக்பூரில் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
நாக்பூரில் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு நாக்பூர் மக்கள் அளித்துள்ள தண்டனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நாக்பூரைச் சேர்ந்த மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வைத்யா 36 இவர் நாக்பூரில் ஒரு கூட்டுறவு சங்க வங்கியின் தினசரி பண வசூல் முகவராக பணிபுரிகிறார். வைத்யா தினமும் சிறுமியின் வீட்டிற்கு பணம் வசூல் செல்வார். ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாமல், சிறுமி மட்டும் தனியாக இருப்பதைக் கண்டுபிடித்து, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.
திடீரென்று, சிறுமியின் தாயார் வீடு திரும்பியபோது வைத்யாவின் செயலைக் கண்டு கூச்சல் எழுப்பினார், அதைத் தொடர்ந்து அருகில் வசிப்பவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சற்று நேரத்தில் இச்செய்தி நகரமெங்கும் தீயெனப் பரவியதால் நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் அங்கே குவிந்தனர்.
ஆனால் அவர் உடனடியாக போலீசில் ஒப்படைக்கப்படவில்லை. அதற்கு முன்னதாக சிறுமியிடம் முறைகேடான நடந்துகொண்ட வைத்யா நகர வீதிகளில் நிர்வாணமாக அழைத்துச் சென்று போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட வைத்யா மீது பார்டி காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வாறு நாக்பூரைச் சேர்ந்த மூத்த காவல் அதிகாரி தெரிவித்தார்.