திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு விஐபி மற்றும் விவிஐபி பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இதற்காக திருப்பதி, ரேணிகுண்டாவில் உள்ள விமான நிலையத்தில் அவர் கள் இளைப்பாறவும், அதிகாரி களிடம் ஆலோசனை நடத்தவும் ஓய்வு இல்லத்தை (விஐபி லவுஞ்ச்) கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 16,500 சதுர மீட்டர் நிலம் ஒதுக்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
ஓய்வு இல்லத்தை பராமரிக்கும் பொறுப்பு ஆந்திர மாநில கல்வி மற்றும் சமூக நலத்துறை வாரியத்திடம் வழங்கப்பட்டுள் ளது. இந்த வாரியத்திடம் ஆண்டுக்கு ரூ.1 லைசென்ஸ் கட்டணமாக பெறப்படும். ஓய்வு இல்லப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
தற்போது திருப்பதி விமான நிலையத்தில், ஒரே சமயத்தில் 200 வெளிநாட்டு பயணிகள் மற்றும் 500 உள்நாட்டு பயணிகள் வந்து செல்ல முடியும். மேலும், 18 சோதனை மையங்கள், 4 லக்கேஜ் பாயிண்ட்களும் உள்ளன. விமான நிலையத்தின் வெளியே ஒரே நேரத்தில் 250 கார்களை நிறுத்தவும் ‘பார்க்கிங்’ வசதி செய்யப்பட்டுள்ளது.