கேரள மாநிலம் திருவனந்த புரத்தில் முதன்மை ஜூடீஷியல் நீதிமன்றத்தின் பெண் நீதிபதி தீபா மோகன். கேரளாவில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த டிரைவர் ஒருவருக்கு ஜாமீன் கோரிய மனு நீதிபதி தீபா மோகன் முன் விசாரணைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் டிரைவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அடித்து உதைப் போம் என்றும் 12 வழக்கறிஞர்கள் தன்னை மிரட்டியதாக தீபா மோகன் போலீஸில் புகார் அளித்தார்.
தனது அறைக்குள்ளேயே வந்து 12 வழக்கறிஞர்கள் மிரட்டிய தாகவும் தான் பெண்ணாக இல்லா விட்டால் அறைக்கு வெளியே இழுத்துப் போய் அடித்திருப் போம் என்றும் வழக்கறிஞர்கள் மிரட்டியதாக நீதிபதி தீபா மோகன் புகார் தெரிவித்துள்ளார்.
கேரளா நீதித்துறை அதிகாரிகள் சங்கமும் இதுதொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் எழுதியது.
நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் தீபா மோகனை மிரட்டிய தாக பார் அசோஸியேஷன் தலைவர், செயலாளர் உட்பட 12 வழக்கறிஞர்கள் மீது திருவனந்த புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.