மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
மத்திய பாஜக அரசின் தவறான கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்து வருகிறது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதமாக குறைந் துள்ளது. நாட்டின் பொருளாதார நிலை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். முதலாளிகளுக்கும் பெரு நிறுவனங்களுக்கு வரி சலுகைகள் அளிப்பதை மத்திய அரசு நிறுத்திவிட்டு அந்த நிதியை வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு செலவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.