மகாராஷ்டிர மாநிலம் சிவாஜி பார்க் மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறுவதற்கு பம்பாய் உயர்நீதிமன்றம் கவலை தெரிவித் துள்ளது. மேலும் இதுதொடர்பாக விளக்கம் தருமாறு மகாராஷ்டிரா அரசு, பெருநகர மும்பை மாநக ராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. இன்று சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெறும் விழாவில் 3 கட்சி கூட்டணியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்க வுள்ளார். இந்தக் கூட்டணிக்கு மகாராஷ்டிரா விகாஸ் அகாதி (மகாராஷ்டிர வளர்ச்சி முன்னணி) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மும்பை தாதரி லுள்ள சிவாஜி பார்க் மைதானத்தில் விழாவை நடத்தக்கூடாது என்று வீகாம் டிரஸ்ட் என்ற அரசு சாரா அமைப்பு மனு தாக்கல் செய்துள் ளது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.சி.தர்மாதிகாரி ஆர்.ஐ.சாக்லா ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறும் போது, “சிவாஜி பார்க் மைதானம், அமைதி மண்டலம் எனப்படும் பகுதியில் உள்ளது. இங்கு நடை பெறும் இந்த பதவியேற்பு விழா தொடர்பாக நாங்கள் எந்தக் கருத் தையும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அங்கு எந்தவித அசம்பா வித சம்பவமும் நடைபெறக்கூடாது என்று நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற பதவியேற்பு விழாக்கள் நடக்கும் மைதானமாக அது மாறிவிடக்கூடாது.
தற்போது விழா நடத்தப்பட்டு அது முன்மாதிரியாக மாறிவிட்டால், எதிர்காலத்தில் வேறு சிலரும் அங்கு விழா நடத்துவதை வழக்கமாக்கிக் கொள்ள விரும்புவார்கள்.
மைதானத்தில் விழாவை நடத்துவது பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை உருவாக்கும். விழாவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து மக்களின் உயிர்களிடமும் நீங்கள் (விழா ஏற்பாட்டாளர்கள்) விளை யாட முடியாது.
பதவியேற்பு விழா நாளை நடைபெறப் போகிறது என்றாலும், இன்று முதலே அங்கு பந்தல் அமைக்க மூங்கில்களும், நாற்காலி களும் கொண்டு வரப்படும். ஏராளமான லாரிகள் அங்கு வருகின்றன. எனவே இன்றும், நாளையும் அந்த மைதானத்தை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது” என்று தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கை டிசம்பர் 12-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மேலும் இதுதொடர்பாக விளக்கம் தருமாறு பெருநகர மும்பை மாநகராட்சி, மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2010-ல் ஒரு என்ஜிஓ அமைப்பு தொடர்ந்த வழக்கின்போது, சிவாஜி பார்க் மைதானத்தில் டிசம்பர் 6 (அம்பேத்கர் நினைவு நாள்), மே 1 (மகாராஷ்டிரா மாநிலம் உருவான நாள்), ஜனவரி 26 (குடியரசு தினம்) ஆகிய நாட்களில் மட்டுமே விழாக்கள் நடத்த நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
அதன் பின்னர் அந்த மைதானத் தில் ஆண்டில் 45 நாட்களுக்கு விளையாட்டு அல்லாத மற்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று மகாராஷ்டிர மாநில அரசும், மும்பை மாநகராட்சியும் விதிகளை மாற்றின.
எம்எல்ஏக்கள் பதவியேற்பு
இதனிடையே நேற்று மகாராஷ் டிராவின் 285 எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சட்டப் பேரவைத் தலைவர் காளிதாஸ் கோலம்கர் பதவிப்பிரமாணம் செய்துவைத் தார்.
அஜித் பவாருக்கு பொறுப்பு
பாஜக கூட்டணிக்கு சென்று துணை முதல்வராக பதவியேற்று பின்னர் ராஜினாமா செய்து கட்சிக்குத் திரும்பியுள்ள அஜித் பவாருக்கும், அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
மனோகர் ஜோஷி
இதற்கு முன்பு 1995-ல் சிவசேனா வைச் சேர்ந்த மனோகர் ஜோஷியும், அதன் பின்னர் 1999-ல் நாராயண் ராணேவும் முதல்வராக பொறுப்பு வகித்தனர். அதன்பின்னர் தற்போதுதான் சிவ சேனாவைச் சேர்ந்த ஒருவர் மகாராஷ்டிரா மாநில முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.
- பிடிஐ