கோப்புப் படம் 
இந்தியா

வட மாநிலங்களில் வசிக்கும் தாய்மொழி தெரியாத தமிழர்களுக்காக தமிழ்-இந்தி அகராதி வெளியிடுகிறது மத்திய அரசு

செய்திப்பிரிவு

புதுடெல்லி

பல்வேறு காரணங்களுக்காக தமிழகத்தை விட்டு குடி பெயர்ந்து இந்தி பேசும் வட மாநிலங்களில் அதிக எண்ணிக் கையில் தமிழர்கள் வசிக்கின்ற னர். அவர்களில் பலருக்கு தமிழில் தெளிவாகப் பேச வரு வதில்லை. தமிழைப் புரிந்து கொள்ளும் திறன் இருந்தா லும் பலருக்கு தமிழில் எழுதவோ படிக்கவோ தெரிவதில்லை. அவர்கள் இந்தி பேசும் மாநிலங் களில் பிறந்து வாழ்வதும் தங்கள் வீடுகளில் தமிழ் பேசு வதைத் தவிர்ப்பதுமே இதற்குக் காரணம் ஆகும். கல்வி நிறு வனங்களிலும் பெரும்பாலும் இந்தியே பேசப்படுவதால், அவர்களால் தமிழ் மொழியை முழுமையாக கற்க முடியாமல் போய் விடுகிறது.

வட மாநிலங்களில் வசிக்கும் வேறு பல இந்திய மொழிகள் பேசும் மக்களின் நிலையும் இதே நிலையில்தான் உள்ளது. இவர்கள் தங்கள் தாய் மொழியை எளிதாக பேசக் கற்றுக்கொள்ள உதவும் வகை யில் மத்திய அரசு இந்தியில் அக ராதிகளை வெளியிட்டு வரு கிறது. மத்திய அரசு நிறுவன மான ‘கேந்திரிய இந்தி சன்ஸ் தான் (தேசிய இந்தி நிறுவனம்)’ சார்பில் இதுவரை 25 இந்திய மொழிகளுக்காக இந்தி அகராதி கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில், தமிழ் மொழியை கற்றுக்கொள்ள ஏது வாக, தமிழ்-இந்தி அகராதியை தயாரித்து வருகிறது.

இதுகுறித்து தேசிய இந்தி நிறுவனத்தின் இயக்குநர் முனை வர் நந்த்கிஷோர் பாண்டே ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, “நம் நாட்டில் செம் மொழி, வட்டார மொழி உள் ளிட்ட சுமார் 1,700 மொழிகள் உள்ளன. இளைஞர்கள் இம் மொழிகளை பேச எளிமையாக கற்றுக்கொண்டு, அதன் கலாச் சார வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக் கத்தில் இந்தி அகராதி வெளியி டப்பட்டு வருகிறது. அனைத்து மொழிகளுக்கும் பொதுவாக இருப்பதாலும், இதை அனைத் துடன் இணைத்துப் பார்க்கவும் இந்த அகராதிகள் இந்தி மொழி யிலேயே வெளியிடப்படு கின்றன” என்றார்.

சுமார் ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த தமிழ்-இந்தி அகராதியில் மொத்தம் 3,200 வாக்கியங்கள் இடம்பெற உள்ளன. இதைப் படிப்பதன் மூலம், நடைமுறையில் பேசப் படும் தமிழ் மொழியை தவறில் லாமல் பேசக் கற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக, ‘கல் ஆப் மேரே கர் ஆயியே’ எனும் இந்தி வாக்கியத்தின் தமிழ் அர்த் தத்தை ‘நாளை நீங்கள் எனது வீட்டுக்கு வாங்க’ என தமிழில் இந்தியில் இருக்கும். ஆனால், இதில் தமிழ் எழுத்துக்கள் இடம் பெறாது. இதனால், இந்தி பேசுபவர்களும் தமிழை எளி தாகக் கற்கலாம் என கருதப் படுகிறது.

இந்த தமிழ்-இந்தி அகராதி தொடர்பான 4-வது ஆலோ சனைக் கூட்டம், உத்தரபிரதேசத் தின் ஆக்ரா நகரில் சமீபத்தில் நடைபெற்றது. மத்திய, மாநில கல்வி நிலையங்களைச் சேர்ந்த, இந்தி நன்கு அறிந்த தமிழர்கள் இந்த அகராதி தயா ரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள னர். இதில், மத்திய நிறுவனங்க ளான ராஜஸ்தான் தேசிய பல் கலைக்கழகத்தின் இந்தி துறை தலைவரும் பேராசிரியருமான என்.லட்சுமி அய்யர், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் இந்தி பேராசிரியர் எம்.ஷாகுல் ஹமீது ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தின் லயோலா கல்லூரி இந்தி துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் லோகேஷ்வர், ஓய்வு பெற்ற இந்தி பள்ளி ஆசிரியர் முனைவர் செல்லம் மற்றும் கன்னிமாரா நூலகத்தில் பணி யாற்றிய பார்வதி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT