மத்திய நிதியமைச்சகத்தில் மேலும் 21 ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற பிறகு நிதியமைச்சகத்தில் ஊழல் அதிகாரிகள் அடுத்தடுத்து நீக்கப் பட்டு வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் மத்திய மறைமுக வரிகள், சுங்கத் துறை யில் (சிபிஐசி) ஆணையர் அந்தஸ் தில் இருந்த 15 ஊழல் அதிகாரி களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப் பட்டது. அதன்பிறகு வருமான வரித் துறையில் 12 மூத்த அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐசி துறையில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய 22 பேருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது. கடந்த செப்டம்பரில் 15 பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.
இந்த வரிசையில் சிபிஐசி துறை யில் மேலும் 21 ஊழல் அதிகாரி களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப் பட்டுள்ளது. இவர்கள் மும்பை, தாணே, விசாகப்பட்டினம், ஹைத ராபாத், ராஜமுந்திரி, ராஜ்கோட், ஜோத்பூர், போபால், இந்தூர் உள் ளிட்ட நகரங்களில் பணியாற்றி வந்தனர்.
தாணேவை சேர்ந்த அதிகாரி யின் வங்கி லாக்கரில் கணக்கில் காட்டப்படாத ரூ.20 லட்சம் பணம் இருந்ததாகவும் அவரது மனைவி யின் பெயரில் ரூ.40 லட்சம் மதிப் புள்ள சொத்துகள் வாங்கப்பட்டிருப் பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள் ளது. மற்றொரு அதிகாரி ரூ.50,000 லஞ்சம் வாங்கியபோது சிக்கிய தாகக் கூறப்படுகிறது. இதுவரை 85 ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய போது, “வரித் துறையில் கருப்பு ஆடுகள் கண்டறியப்பட்டு களை எடுக்கப்படும்” என்று உறுதி அளித் தார். இதன்படி நிதியமைச்சகத்தில் ஊழல் அதிகாரிகள் களை எடுக்கப் படுகின்றனர் என்று அத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சொத்து விவரம் தாக்கல்
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களின் சொத்து விவரங்களை ஆண்டு தோறும் ஜனவரி 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் 6,699 ஐஏஎஸ் பணியிடங்கள் உள்ளன. இதில் தற்போது 5,205 ஐஏஎஸ் அதிகாரி கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 444 அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வில்லை என்று கூறப்படுகிறது.