திமுக எம்.பி. திருச்சி சிவா திருநங்கைகள் பாதுகாப்பு தொடர்பாக தனி நபர் மசோ தாவை மாநிலங்களவையில் கொண்டு வந்தார். நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்த 27 ஆலோசனைகள் சேர்க்கப்பட்டு இந்த மசோதா திருத்தப்பட்டது.
திருநங்கைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி வழங்க வகை செய்யும் இந்த மசோதா மக்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப் பட்டது. இதைத் தொடர்ந்து இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
திருநங்கைகள் உரிமை மசோ தாவின் சில அம்சங்கள் தொடர் பாக மக்களவை, மாநிலங் களவையில் எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தன. எனினும் மத்திய அரசின் முனைப்பால் இரு அவைகளிலும் மசோதா நிறை வேற்றப்பட்டுள்ளது.