இந்தியா

மாநிலங்களவையில் கடும் அமளிக்கு இடையில் சரக்கு, சேவை வரி மசோதா தாக்கல்: சோனியா, ராகுல் மீது அருண் ஜேட்லி குற்றச்சாட்டு

ஐஏஎன்எஸ், பிடிஐ

கடும் அமளிக்கு இடையில் மாநிலங் களவையில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தாக்கல் செய்தார். மாநிலங் களவை தேர்வுக்குழு அறிக்கைக்குப் பிறகு, இம்மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.

நாடு முழுவதும் சீரான வரிவிதிப்பை அமல்படுத்தும் நோக்கத்தில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்ட பின்பு, மாநில சட்டப்பேரவைகளில் 50 சதவீத பேரவைகளில் இம்மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். அதன் பின்னர், அரசியலமைப்பில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதன் ஒரு பகுதியாக மாநிலங்களவையில் ஜிஎஸ்டி மசோதாவை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தாக்கல் செய்தார். அப்போது, அவையின் காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, அலுவல் ஆய்வுக்குழுவில் இது விவாதிக் கப்படாததால் மசோதாவை விவாதத்துக்கு எடுத்துக் கொள் வதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் பேரவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே சென்று கோஷங்களை எழுப்பி அமளி செய்தனர்.

அருண் ஜேட்லி கோபம்

காங்கிரஸ் எம்.பி.க்களின் இச்செயலால் கோபமடைந்த அருண் ஜேட்லி, மசோதா நிறை வேறுவதைத் தாமதப்படுத்தவே காங்கிரஸ் இவ்வாறு நடந்து கொள்கிறது என குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக அவர் கூறிய தாவது:

மசோதா நிறைவேறுவதற்கு, அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப் புடன் அரசியல் மற்றும் அரசியல மைப்பு ரீதியான அனைத்து முயற்சி களையும் அரசு மேற்கொள்ளும்.

காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுவதற்கான உண்மையான காரணம், இந்த தேசத்தின் பொருளாதார வளர்ச்சி யைத் தடுப்பதாகும். இந்தியப் பொருளாதாரம் வளர்வதை அவர்கள் விரும்பவில்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறாமல் தடுப்பதற்காக ஏதாவது சாக்கு அவர்களுக்குத் தேவைப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக வேண்டும் என காங்கிரஸ் விரும்பினால், அதை அவர்கள் தெளிவாகக் கூறட்டும்.

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தோல்வியை, அக்கட்சியின் இரு முதன்மைத் தலைவர்களால் ஜீரணிக்க முடியில்லை. நேரு குடும்பத்தைத் தவிர வேறு நபர்களால் இந்த தேசத்தை ஆள முடியும் என்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆகவேதான், நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் நிலையில் காங்கிரஸ் உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் காரணங்களை ஆராய்வதோடு, ஒத்துழைப்பு பாதைக்கு, குறிப் பாக தான் முன்வைத்த சில கொள்கைகள் அளவிலாவது ஒத்துழைப்பு அளிக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார்.

காங்கிரஸ் கடும் அமளி

மசோதா தாக்கல் செய்யப் பட்டாலும், காங்கிரஸின் தொடர் அமளியால் அது விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. காங்கிரஸ் எம்.பி.க்களின் கடும் அமளியால் அவை நடவடிக் கையைத் தொடர முடியவில்லை. எனவே, அவையை பேரவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

பெரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாகக் கருதப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை, வரும் 2016-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

மாநிலங்களவையில் காங்கிரஸுக்கு 68 உறுப்பினர்கள் உள்ளனர். 48 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ள பாஜகவுக்கு 120 எம்.பி.க்கள் ஆதரவாக உள்ளனர். அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற மூன்றில் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனவே, சிறிய கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.

SCROLL FOR NEXT