கோப்புப்படம் 
இந்தியா

வியாபம் முறைகேடு வழக்கில் 30 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை: டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

காவலர் தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக 30 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ஒருவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் காவலர் பணிகளுக்கான தேர்வினை மாநில தொழிற்கல்வி தேர்வு வாரியம் (வியாபம்) நடத்தி வந்தது. இந் நிலையில், இந்த வாரியம் மூல மாக நடத்தப்பட்ட பல்வேறு தேர்வு களில் முறைகேடுகள் நடைபெற்ற தாகவும், பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் அரங்கேறியுள்ள தாகவும் கடந்த 2013-ம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது.

நாடு முழுவதும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டு தொடர்பாக முதலில் மத்திய பிரதேச போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். எனினும், பல்வேறு அரசியல்வாதி களின் தலையீட்டின் காரணமாக இந்த வழக்கை போலீஸாரால் சுதந்திரமாக விசாரிக்க முடிய வில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதன் தொடர்ச்சி யாக, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

பின்னர், போலீஸாரிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களை அடிப் படையாக கொண்டு சிபிஐ அதிகாரி கள் தங்கள் விசாரணையை தொடங்கினர். இதில், தேர் வறைகளில் ஆள்மாறாட்டங்களில் ஈடுபட்டவர்கள், இடைத்தரகர்கள், ஆள்மாறாட்டம் மூலமாக பயனடைந்தவர்கள், வியாபம் தேர்வு வாரிய அதிகாரிகள் என மொத்தம் 31 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இதில் இந்த வழக்கு தொடர்பான இறுதி வாதங்கள் அண்மையில் நடைபெற்றன. அப்போது, அரசுத் தரப்பில் 91 பேர் சாட்சியங்களாக ஆஜர்படுத்தப் பட்டனர். மேலும், குற்றம்சாட்ட வர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களும் அரசுத் தரப்பில் சமர்ப்பிக்கப் பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த 31 பேரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், அவர்களுக்கான தீர்ப்பு விவரங்களை நீதிபதி எஸ்.பி. சாஹு நேற்று அறிவித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட 31 பேரில் 30 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ஒருவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. தீர்ப்பு வழங் கப்பட்டதை அடுத்து, குற்ற வாளிகள் அனைவரையும் போலீஸார் சிறையில் அடைத்தனர்.

தீர்ப்பு குறித்து சிபிஐ வழக்கறிஞர் சதிஷ் தினகர் கூறும்போது," உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இவ்வழக்கு மாநில சிறப்புப் படையிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 450 ஆவணங்களை ஆதா ரங்களாக தாக்கல் செய்தோம். 91 பேர் சாட்சியம் அளித்தனர். அதன் அடிப்படையில் இ்பபோது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

வியாபம் ஊழல் விவகாரங்கள் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் மொத்தம் 170 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT