கோவா மாநில லஞ்ச விவகா ரத்தில் முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் சர்ச்சில் அலிமோ கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து அந்த மாநில முதல்வர் லஷ்மிகாந்த் பர்சேகர் கூறியபோது, லஞ்ச விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை, சட்டம் தனது கடமையைச் செய்கிறது என்று தெரிவித்தார்.
கோவாவில் கடந்த 2007 முதல் 2012 வரை முதல்வர் திகாம்பர் காமத் தலைமையிலான காங் கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போது மாநில குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றும் திட்ட ஒப்பந்தம் அமெரிக்காவின் லூயிஸ் பெர்ஜர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தைப் பெற லூயிஸ் பெர்ஜர் நிறுவனம் சார்பில் அப்போதைய கோவா அமைச்சர் மற்றும் அதிகாரி களுக்கு லஞ்சம் வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு அமெரிக்காவில் நடைபெறு கிறது. இந்த வழக்கு விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதே விவகாரம் தொடர்பாக கோவா மாநில போலீஸார் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக லூயி்ஸ் பெர்ஜர் இந்திய கிளையின் முன்னாள் இயக்குநர் சத்யாகம் மொஹந்தி, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவன முன்னாள் இயக்குநர் ஆனந்த் வாசாசுந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்த சர்ச்சில் அலிமோ நேற்றுமுன்தினம் இரவில் கைது செய்யப்பட்டார்.
அவர் கூறியபோது, நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரண மாக என் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து கோவா முதல்வர் லஷ்மிகாந்த் பர்சேகர் கூறியபோது, போலீ ஸார் தங்கள் கடமையைச் செய்கிறார்கள். இதில் அரசியல் தலையீடு இல்லை என்று அவர் தெரிவித்தார்.