ஐந்து குழந்தைகள் கொண்ட ஒவ்வொரு இந்து குடும்பத்துக்கும் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சிவசேனா கட்சியின் ஆக்ரா மாவட்டப் பிரிவு அறிவித்துள்ளது.
இதுகுறித்து உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்ட சிவசேனா தலைவர் வீணு லாவணியா நேற்று முன்தினம் கூறும்போது, “நாட்டின் சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பில் இந்துக்களின் வளர்ச்சி வகிதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே சிவசேனாவின் ஆக்ரா பிரிவு சார்பில் பரிசுத் திட்டம் அறிவித்துள்ளோம். 2010 முதல் 2015 வரை 5 குழந்தைகள் கொண்ட இந்து குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். இதற்கு உள்ளாட்சி அமைப்புகள் வழங்கிய பிறப்புச் சான்றிதழ்களை இக்குடும்பத்தினர் கொண்டுவரவேண்டும்” என்றார்.
நாட்டில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்து வருவதற்கு சிவசேனா கவலை தெரிவித்துள்ளது. “ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வதை தடுக்கும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று அக்கட்சி கோரியுள்ளது.