கோப்புபடம் 
இந்தியா

அயோத்தி வழக்கில் மேல்முறையீடு செய்வது மத நல்லிணக்கத்தை பாதிக்கும்: சிறுபான்மையினர் ஆணையம் கருத்து

செய்திப்பிரிவு

அயோத்தி வழக்கில் மேல்முறையீடு செய்வது இந்து, முஸ்லிம்களின் நல்லிணக்கத்தை பாதிக்கும் என்று தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் கயோருல் ஹசன் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் கடந்த 9-ம் தேதி அனுமதி வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தால் இந்து, முஸ்லிம்களின் நல்லிணக்கத்தை பாதிக்கும். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முஸ்லிம்கள் உதவி செய்ய வேண்டும். இதேபோல அயோத்தியில் மசூதி கட்ட இந்துக்கள் உதவி செய்ய வேண்டும். இது ஒரு மைல்கல்லாக அமையும்.

பெரும்பாலான முஸ்லிம் அமைப்புகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடப்போம் என்று அறிவித்துள்ளன. இதனை வரவேற்கிறேன். ஆனால் சிலர் மட்டும், அரசியல் ஆதாயத்துக்காக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT