சோனியா காந்தி, உத்தவ் தாக்கரே, சரத் பவார் : கோப்புப்படம் 
இந்தியா

'மகா' அரியணை போட்டி: கடந்து வந்த பாதை

பிடிஐ

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் 24-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து நாள்தோறும் பரபரப்பு பேட்டிகள், திடீர் திருப்பங்கள், சட்டென்று மாறும் நிகழ்வுகள் என்று பரபரப்போடுதான் நகர்ந்து வருகிறது.

எந்த கட்சி நிலையான ஆட்சியை அமைக்கும் என்று தெரியாத நிலையில் பிரச்சினை உச்ச நீதிமன்றம் கதவை தட்டியுள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி தப்புமா, அல்லது சேனா,காங்,என்சிபிகூட்டணி பதவிஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாளை உச்ச நீதிமன்றம் முக்கிய முடிவை அறிவிக்க உள்ளது.

அதற்கு முன்பாக மகாராஷ்டிரா அரசியல் தேர்தலுக்குப்பின் கடந்த பாதையைப் பார்க்கலாம்.

அக்.21- மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது.

அக்.24: சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகின. பாஜக 105 இடங்கள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட சிவசேனா 56 இடங்களில் வென்றன. என்சிபி 54 இடங்களையும், காங்கிரஸ் 44இடங்களையும் கைப்பற்றின

நவம்.9: மகாராஷ்டிரா சட்டப்பேரவைக் காலம் முடிந்ததால், தனிப்பெரும் கட்சியா இருக்கும் பாஜகவைஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். 48 மணிநேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் அளித்தார்

நவம்.10: பாஜக தனக்குப் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் இல்லை எனக் கூறி ஆட்சி அமைக்க மறுத்தது.

நவம்.10: அன்று மாலையே சிவசேனா தன்னால் ஆட்சி அமைக்கப் பெரும்பான்மையைத் திரட்ட முடியும். தனக்கு வாய்ப்பு வேண்டும் என ஆளுநர் கோஷியாரிடம் கேட்டது. சிவசேனா 24 மணிநேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு விதித்தார்

நவம்.11: மாநிலத்தில் தன்னால் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும், பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதற்குக் கூடுதலாக 3 நாட்கள்அவகாசத்தை ஆளுநரிடம் சிவசேனா சார்பில் கோரப்பட்டது. ஆளுநர் மறுத்துவிட்டார்.

நவம்.12: சிவசேனா ஆட்சி அமைக்க உரிமை கோரிய கோரிக்கையை ஆளுநர் மறுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனுத்தாக்கல் செய்தது.

நவம்.12: என்சிபி கட்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க அளிக்கப்பட்ட வாய்ப்பிலும் அந்த கட்சி இயலாது எனத் தெரிவித்தது.இதனால், மகாராஷ்டிராவி்ல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

நவம்.13: சிவசேனா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ஆளுநர் முடிவை எதிர்ப்பதாகக் குறிப்பிடவில்லை.

நவம்.22: சிவசேனா,என்சிபி, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து மகாராஷ்டிரா விகாஸ் அகாதி என்ற பெயரில் தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்தன.

நவம்.23: மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அதிகாலை5.47மணிக்கு விலக்கப்பட்டது. முதல்வராகத் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வராக என்சிபி மூத்த தலைவர் அஜித் பவாரும் பதவி ஏற்றார்கள்.

நவம்.23: மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரியின் முடிவை எதிர்த்து சிவசேனா, காங், என்சிபி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

நவம்.24: மகாராஷ்டிரா ஆளுநர் கோஷியாரிடம் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் தங்களுக்கு எத்தனை எம்எல்ஏக்கள்ஆதரவு இருக்கிறது என்பது தொடர்பான ஆதரவு கடிதங்களையும், ஆவணங்களையும் தாக்கல் செய்ய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

SCROLL FOR NEXT