மும்பையில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு பிறகு, தமது ஆதரவாளர்கள் புடை சூழ செல்கிறார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. படம்: விவேக் பிந்த்ரே 
இந்தியா

காட்சி மாறியது எப்படி?- நள்ளிரவில் நடந்தது என்ன?

செய்திப்பிரிவு

மும்பை

மகாராஷ்டிராவில் ஒரு மாத குழப்பம் தீர்ந்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைப்பது என நேற்று முன்தினம் உறுதியானது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பரர் என்றும், அவர் நேற்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என்றும் நாடே எதிர்பார்த்திருந்தது.

இந்நிலையில், திடீர் திருப்ப மாக நேற்று காலை 8 மணியளவில் பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப் பேற்றார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் உறவினரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற் றார். இதனால், சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. ஒரே இரவில் காட்சி மாறியது எப்படி, நள்ளிரவில் நடந்தது என்ன என்ற கேள்வி நாட்டு மக்களின் மனதில் எழுந்துள்ளது.

என்சிபி மூத்த தலைவரும் எம்எல்ஏ-வுமான அஜித் பவாருடன் பாஜக மூத்த தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வந்துள்ளனர். இதில் நேற்று முன்தினம் இரவு 11.45 மணிக்கு உடன்பாடு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

11.55 மணி: தேவேந்திர பட்னா விஸ் கட்சித் தலைமையை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, அஜித் பவாருட னான கூட்டணி குறித்து தெரிவித் துள்ளார். அத்துடன் சிவசேனா கூட்டணி ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு முன்பாக, தான் பதவியேற்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

12.30 மணி: டெல்லி செல்ல திட்டமிட்டிருந்த ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி நள்ளிரவில் தனது பயணத்தை ரத்து செய்தார்.

2.10 மணி: குடியரசுத்தலைவர் ஆட்சியை திரும்பப் பெறுவதற் கான உத்தரவை தயாரித்து அதிகாலை 5.47 மணிக்கு வழங்கு மாறும் காலை 6.30 மணிக்கு பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் ஆளுநரின் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

2.30 மணி: இரண்டு மணி நேரத்தில் கோப்புகளை சமர்ப்பிப்ப தாகவும், காலை 7.30 மணிக்கு பதவியேற்பு விழாவை நடத்த லாம் என்றும் செயலாளர் தெரிவித்துள்ளார்.

காலை 5.30 மணி: தேவேந்திர பட்னாவிஸும், அஜித் பவார் உள்ளிட்டோரும் ஆளுநர் மாளிகை சென்றடைந்தனர்.

5.47 மணி: குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டது. ஆனால். இதுகுறித்து அறிவிப்பு காலை 9 மணிக்குதான் வெளியிடப்பட்டது.

7.50 மணி: ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி தலைமையில் பதவியேற்பு விழா தொடங்கியது.

8.01 மணி: முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும் துணை முதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றுக் கொண்டதாக செய்தி வெளியானது.

8.16 மணி: புதிய முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

SCROLL FOR NEXT