இந்தியா

கட்சி மாறிய எம்எல்ஏக்களை தோற்கடிப்பதே லட்சியம்: முன்னாள் முதல்வர் சித்தராமையா உறுதி

செய்திப்பிரிவு

இரா.வினோத்

கட்சி மாறி, பாஜக வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள 13 பேரையும் கர்நாடக இடைத்தேர்தலில் தோற்கடிப்பதே காங்கிரஸின் லட்சியம் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார் இது குறித்து மைசூருவில் நேற்று அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவ‌து:டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ், மஜத தனித்தனியாக போட்டியிட்டாலும் இரண்டுக்கும் ஒரே இலக்குதான்.

எங்களது கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு, பாஜக பக்கம் சாய்ந்த 13 தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களையும் வீழ்த்த வேண்டும் என்பதே அது. இதில் மஜத தீவிரமாக போராடாவிட்டாலும், 13 பேரையும் தோற்கடிப்பதையே காங்கிரஸ் லட்சியமாக கொண்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா, ஹரியாணா தேர்தல்களில் கட்சி மாறி, களமிறங்கிய வேட்பாளர்களை மக்கள் தோற்கடித்துள்ளனர். அதேபோல கர்நாடகாவிலும் தாய் கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களை மக்கள் தோற்கடிக்க தயாராகி வருகின்றனர்.

தற்போது இடைத்தேர்தல் நடக்கும் 15 தொகுதிகளில் 12 தொகுதிகளில் கடந்த தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. அதன் அடிப்படையில் இந்த முறையும் அந்த இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT