ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவற்றை 2020 மார்ச் மாதத்துக்குள் விற்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா ட்விட்டர் பதிவில், “மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் நமது பெருமைக் குரியவை. அரசு நிறுவனங்கள் பொன்முட்டையிடும் வாத்துகள் போன்றவை. நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று பாஜக உறுதியளித்தது. ஆனால், நாட்டின் சிறந்த நிறு வனங்களை நஷ்டத்தில் இயங்கச் செய்து பின்னர் அவற்றை விற்பனை செய்யும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.