பிரபல திரைப்பட தயாரிப்பாள ரான மறைந்த ராமா நாயுடு வுக்கு சொந்தமான ஸ்டுடியோ ஹைதராபாத்தில் உள்ளது.
இந்த ஸ்டுடியோவிலும் ராமா நாயுடுவின் மகனும் தயாரிப் பாளருமான சுரேஷின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரி அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். கணினிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் சொத்துகள் கண் டறியப்பட்டதாக தெரிகிறது. சுரேஷின் தம்பியும் பிரபல நடிகருமான வெங்கடேஷின் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.
இதுபோல் ‘நான் ஈ’ பட புகழ் நடிகர் நானியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. வரு மானத்திற்கு உரிய வரி செலுத் தாதது தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.