இந்தியா

காஷ்மீரில் 5,161 பேர் கைது

செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கையை அடுத்து அம்மாநிலத்தில் கல் வீசுவோர், அரசியல்வாதிகள், பிரிவினைவாதிகள் என மொத்தம் 5,161 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவை யில் உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி நேற்று கூறும் போது, “ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து நட வடிக்கையை அடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் அசம்பாவிதங் களை தவிர்ப்பதற்காக கல்வீச்சு மற்றும் குற்றச்செயல்களில் ஈடு படுவோர், பிரிவினைவாதிகள், அரசியல்வாதிகள் என மொத்தம் 5,161 பேர் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் கைது செய்யப் பட்டு தடுப்புக் காவலில் வைக்கப் பட்டனர். இவர்களில் கல்வீச்சில் ஈடுபடும் 218 பேர் உட்பட 609 பேர் தற்போது தடுப்புக் காவலில் உள்ளனர்” என்றார்.

- பிடிஐ

SCROLL FOR NEXT