மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), சிவசேனா வுடன் இணைந்து நிலையான அரசை அமைப்போம் என காங் கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பிரித்விராஜ் சவாண் தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவும் சிவசேனாவும் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருப்ப தால், இரு கட்சிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முன் வராததையடுத்து, அங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பாஜக கூட்டணியி லிருந்து சிவசேனா வெளியேறியது.
இதனால், சிவசேனா கட்சி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கி உள்ளது. ஆனால், என்சிபி, காங் கிரஸ் கட்சியும் சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது தொடர் பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று தேசிய வாத காங்கிரஸ் கட்சித் தலைவர் களை, சரத்பவாரின் வீட்டில் காங்கிரஸ் தலைவர் பிரித்விராஜ் சவாண் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “மகாராஷ் டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் நிலையான அரசு அமைக்கும்” என்றார்.