பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று நவம்பர் 29-ம் தேதி இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியா வரவுள்ளார் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று தெரிவித்தார்.
கொழும்பில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், கோத்தபய ராஜபக்சவை சந்தித்து இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார்.அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக கோத்தபய பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.