இந்தியா

தொலைபேசி ஒட்டுகேட்க 10 அமைப்புகளுக்கு அதிகாரம்: மக்களவையில் மத்திய அரசு தகவல்

செய்திப்பிரிவு

தொலைபேசி ஒட்டுகேட்க சிபிஐ, அமலாக்கத் துறை, உளவுத் துறை உள்ளிட்ட 10 மத்திய அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மக்களவையில் நேற்று உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி கூறியதாவது:

நாட்டின் இறையாண்மை மற்று ஒருமைப்பாட்டை காப்பதற்காக தொலைபேசி, கணினி தொடர்புடைய எந்தவொரு தகவல் பரிமாற்றத்தையும் கண்காணிக்கவும் அல்லது சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை ஆய்வு செய்யவும் மத்திய, மாநில அரசுகளுக்கு 2000 ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டம் அதிகாரம் வழங்குகிறது. மத்திய அரசின் சிபிஐ, அமலாக்கத் துறை, என்ஐஏ, உளவுத் துறைகள் (ஐபி, ரா), மத்திய நேரடி வரிகள் வாரியம், வருவாய் புலனாய்வு இயக்குநரகம், போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி காவல் துறை உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு தகவல் பரிமாற்றத்தை கண்காணிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கு முன்கூட்டியே ஒப்புதல் பெறுவது அவசியம் ஆகும். மத்திய அரசை பொறுத்தவரை மத்திய உள்துறை செயலாளரும், மாநில அரசுகளை பொறுத்தவரை அந்தந்த மாநில உள்துறை செயலாளரும் இதற்கான அனுமதி அளிக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT