இந்தியா

டெல்லி துணை நிலை ஆளுநருடன் கேஜ்ரிவால் சந்திப்பு

செய்திப்பிரிவு

டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை சந்தித்தார்.

ஆம் ஆத்மி கட்சித் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.

டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் ஆம் ஆத்மி கட்சி அங்கு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

எனினும், இதற்காக டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க காங்கிரஸிடம் ஆதரவு கோரபோவதில்லை என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

மேலும் டெல்லி சட்டப்பேரவைக்கு மறுதேர்தல் நடத்த கோரவும் ஆம் ஆத்மி திட்டமிட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை அரவிந்த் கேஜ்ரிவால் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது, டெல்லி அரசியல் நிலவரம் குறித்தும் தேர்தலுக்கு பிந்தைய நடவடிக்கை குறித்தும் பேச்சுவார்த்தை நடந்ததாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT