இந்தியா

நகர்ப்புற நக்சல்கள், இவர்களுக்கு உதவுவோர் ஆகியோரை விட்டு விட வேண்டாம்: சி.ஆர்.பி.எஃப்-க்கு அமித் ஷா அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சிஆர்பிஎஃப் தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இடது சாரி தீவிரவாதத்தை நசுக்க சிஆர்பிஎஃப் அதிகாரிகளிடத்தில் அறிவுறுத்தினார்.

சி.ஆர்.பி.எஃப் உயரதிகாரிகளிடம் அமித் ஷா கூறியதாக வெளியாகிய தகவல்களில், ‘நகர்ப்புற நக்சல்கள் மற்றும் இவர்களுக்கு உதவுவோரை விட்டு விட வேண்டாம் கடும் நடவடிக்கை பாயட்டும்’ என்று அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘இடது சாரி தீவிரவாதம்’ பாதித்த மாவட்டங்களில் சிஆர்பிஎஃப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் இவர்களுக்கு யாரையும் கைது செய்ய அனுமதியில்லை.

சிஆர்பிஎஃப் தலைமை இயக்குநர் ஆர்.ஆர்.பட்நாகர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தங்கள் படையினருக்கு இருக்கும் வசதி, நக்சல்களின் திட்டம், தாக்குதல் முறை ஆகியவை பற்றி விரிவாக விளக்கினார்.

அதன் பிறகு அமித் ஷா, இடது சாரி தீவிரவாதத்துக்கு எதிராக அடுத்த 6 மாதங்களில் திறம்பட்ட, முடிவான நடவடிக்கைகள் தேவை என்றும் சாலை தொடர்பு, மருத்து வசதிகள் ஆகியவை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேம்படுத்தப்பட வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், கிராமத்தினரை அணுகி மத்திய அரசின் நலத்திட்டங்கள் அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பிக்கப்படவும் அமித் ஷா வலியுறுத்தினார். அதே போல் நடவடிக்கையின் போது உயிர்த்தியாகம் செய்யும் வீரரின் குடும்பத்தினரை மூத்த அதிகாரிகள் போய்ப் பார்க்க வேண்டும் என்றும் மேக் இன் இந்தியா முயற்சிகள் பற்றியும் படையினர் காதியையும் உள்ளூர் தயாரிப்புகளையும் பயன்படுத்துமாறு அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

மேலும் உள்நாட்டுப் பாதுகாப்பில் சிஆர்பிஎஃப் ஜவான்கள், அதிகாரிகள் பங்களிப்பை அமித் ஷா பாராட்டியதாகவும் தெரிகிறது.

SCROLL FOR NEXT