பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

வாட்ஸ்அப்பில் ஆட்சேபகரமான படம்: வெளியிட்டவர் கைது

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேசத்தில் இந்து மதக் கடவுளான ராமர் பற்றிய ஆட்சேபகரமான படத்தை பதிவேற்றியதாக குற்றஞ்சாட்ட ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

உ.பி.யில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் அமைக்கலாம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பையொட்டி வாட்ஸ்-அப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பியதாக இதுவரை 70 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 270-க்கும் அதிகமான நபர்களின் சமூக வலைத்தளக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ராமர் பற்றிய ஆட்சேபகரமான படத்தை பதிவேற்றியதாக குற்றஞ்சாட்ட ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து எஸ்.எச்.ஓ ஹயாத் நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ரவீந்திர குமார் கூறுகையில், ''ஹயாத் நகரில் வசிக்கும் ஆசிப் அப்பாஸி, செவ்வாயன்று ஒரு வாட்ஸ்அப் குழுவில் ராமர் குறித்த ஆட்சேபிக்கத்தக்க புகைப்படத்தை வெளியிட்டார், அதைத் தொடர்ந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்றிரவு அப்பாஸி கைது செய்யப்பட்டார்'' என்றார்.

இந்த வழக்கில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

SCROLL FOR NEXT