கர்நாடகாவில் விவசாயிகள் தற் கொலை அதிகரித்துவரும் நிலையில், அவர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக விவசாயிகள் சங்கம் சார்பில், 30 ஆயிரம் கிராமங்களில் 180 நாட்களுக்கு தொடர் விழிப்புணர்வுப் பயணம் நாளை முதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கே.எஸ்.புட்டனையா நேற்று பெங்களூருவில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
விவசாயிகள் தற்கொலை அதி கரித்து வருவது மிகுந்த வேத னையை அளிக்கிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் புதிய விவசாய கொள்கையை வகுக்க வேண்டும். இதையெல் லாம் தாண்டி விவசாயிகளும், சங்கங்களும் புதிய வழிமுறை களைக் கையாள வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர் கொள்ள அனைவருக்கும் ஆற்றலும், தன்னம்பிக்கையும் தேவைப்படுகிறது.குறிப்பாக இயற்கையாலும், அரசாலும், சமூகத்தாலும் புறக்கணிக்கப்படும் விவசாயிகளுக்கு கூடுதல் ஆற்றல் தேவைப்படுகிறது.
தன்னம்பிக்கையும், மன தைரிய மும் இல்லாததால், விவசாயிகள் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலை சிந்தனையில் சிக்கியுள்ள விவசாயி களுக்கு போதிய துணிவையும், அறிவுரையும், ஆலோசனையும் வழங்க வேண்டும். பிரச்சினை களிலிருந்து விடுபட்டு வெற்றி பெறுவதற்கான வழியை காட்ட வேண்டும்.
எனவே விவசாயிகளுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநிலம் தழுவிய எங்களின் பயணம் நாளை தொடங்குகிறது. 180 நாட்களுக்கு நடைபெறும் இந்தப் பயணத்தின்போது 30 ஆயிரம் கிராமங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம்.
பல்வேறு தரப்பினர் பங்கேற்பு
இந்தப் பயணத்தின் போது தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் வீடுகளுக்குச் சென்று ஆறுதல் கூறுவோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விவசாய சங்கங்களின் மூலம் உதவித் தொகை வழங்கப்படும். விவசாயிகளிடம் தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சிறிய அளவிலான கூட்டங்கள் நடத்தப்படும்.
இந்தக் கூட்டத்தில் விவசாய சங்கத்தின் தலைவர்கள் மட்டுமல்லாமல் எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விவசாயிகள் மத்தியில் உரையாற்றுவார்கள். விவசாயிகளுக்கு 10 லட்சம் சிறு நூல்கள் வழங்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.