வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நாடு தழுவிய லாரி ஸ்டிரைக் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தலைவர் பீம் வாத்வா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அனைத்து சுங்கச் சாவடிகளை யும் அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட எங்களது நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவில்லை.
இதுதொடர்பாக கடந்த வியாழக்கிழமை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித் துப் பேசினோம். இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதனால் வேறு வழியின்றி வரும் அக்டோபர் 1 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். நாடு முழுவதும் சுமார் 93 லட்சம் லாரிகள், 50 லட்சம் பஸ்கள் ஓடாது. இதனால் நாளொன்றுக்கு ரூ.1700 கோடி வரை இழப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.