பிரபல மலையாள நடிகர் பரவூர் பரதன் (86) கொச்சியில் நேற்று காலமானார்.
மலையாளத்தில் 250 படங் களுக்கு மேல் நடித்த குணச்சித்திர நடிகர் பரவூர் பரதன். 1950-களில் வில்லன் நடிகராக அறிமுகமான இவர், குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை பாத்திரங்களிலும் பல படங்களில் நடித்துள்ளார். ‘சிஐடி மூசா’, மேலேபரம்பில் ஆண் வீடு’, ‘இன் ஹரிஹர் நகர்’ உள் ளிட்ட படங்களில் மலையாளத்தின் முன்னணி நடிகர்கள் அனை வருடனும் அவர் நடித்துள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டுமுதல் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று காலை கொச்சியில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருக்கு தங்கமணி என்ற மனைவியும் மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.