இந்தியா

அயோத்தி விவகாரத்தில் அமைதி காக்க பிரதமர் அழைப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் நிலையில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை எந்தவொரு சமூகத்தினருக்கும் கிடைத்த வெற்றியாகவோ தோல்வியாகவோ கருதக் கூடாது. அயோத்தி தீர்ப்புக்கு பிறகு, அமைதி மற்றும் ஒற்றுமையை காப்பதே நமது முன்னுரிமை பணியாக இருக்க வேண்டும்.

அயோத்தி தீர்ப்பையொட்டி நாட்டில் ஒற்றுமையான சூழ்நிலையை பராமரிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT