இந்தியா

ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு 

செய்திப்பிரிவு

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது.

இந்தக் கடுமையான பனிப்பொழிவு காரணமாக அம்மாநிலங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், “ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலை போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முஹல் சாலையில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் சாலை போக்குவரத்து கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறது.

மேலும், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ராஷெல் கிராமத்திலும் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. பனிப்பொழிவு காரணமாக கெய்லாங் மற்றும் கோசார் ஆகிய பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து பனிப்பொழிவு அதிகம் ஏற்பட்டுள்ள இடங்களில் பனிக்கட்டிகளை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்திலும் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் அங்கு வரும் ஆன்மிக பக்தர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT