புதுடெல்லி, பிடிஐ
சிபிஐ பதிவு செய்த 35 வங்கி மோசடி வழக்குகள் தொடர்பாக நாடு முழுதும் இன்று 169 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. சுமார் ரூ.7000 கோடி வங்கி மோசடி விவகாரமாகும் இது.
பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆந்திர வங்கி, ஓரியண்டல் காமர்ஸ் வங்கி, ஐ.ஓ.பி, அலஹாபாத் வங்கி, கனரா வங்கி, தேனா வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த வங்கி, செண்ட்ரல் வங்கி, யூனியன் வங்கி, ஐடிபிஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் தொடர்பான மோசடி வழக்குகள் ஆகும் இவை.
பொதுத்துறை வங்கிகளில் மொத்தம் 35 மோசடி வழக்குகளைப் பதிவு செய்த சிபிஐ இன்று காலை பல நகரங்களில் 169 இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தியது.
டெல்லி, குர்கவான், சண்டிகர், லூதிஅயனா, டெஹ்ராடூன், நொய்டா, பாரமதி, மும்பை, தானே, சில்வசா, கல்யாண், அமிர்தசரஸ், பாரிதாபாத், பெங்களூரு, திருப்பூர், சென்னை, மதுரை, கொல்லம், கொச்சின், பாவ்நகர், சூரத், அகமதாபாத், கான்பூர், காஜியாபாத், போபால் வாரணாசி, சந்தவ்லி, பாட்டிண்டா, குருதாஸ்பூர், மொரினா, கொல்கத்தா, பாட்னார், கிருஷ்ணா, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் ரெய்டின் விளைவுகள் என்ன? கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்ன போன்ற விவரங்கலை சிபிஐ தெரிவிக்க மறுத்து விட்டது.