பூமியை போலவே 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில் 3 கிரகங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமியை போலவே உயிர்கள் வாழக்கூடிய வேறு கிரகங்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சியில் பல நாடுகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. வேற்றுகிரகத்தில் மனிதர்கள் வசிக்கிறார்களா என்பதை அறியும் ஆராய்ச்சியும் நடக்கிறது. இந்நிலையில், பூமியில் இருந்து 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மேலும் 3 கிரகங்கள் உள்ளதை அதிநவீன தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித் துள்ளனர். அதற்கு ‘எச்டி 219134’ என்று பெயர் வைத்துள்ளனர்.
சூரியனை பூமி உட்பட கிரகங்கள் சுற்றி வருவது போலவே மிகப்பெரிய நட்சத் திரம் ஒன்றை இந்த 3 புதிய கிரகங்களும் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. சூரியனுக்கு அருகில் இருக்கும் கிரகங்களில் அதிக வெப்பம் காரணமாக உயிர்வாழ்வதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை. அதேபோல் வெகு தொலைவில் உள்ள கிரகங்கள் பனியால் உறைந்து கிடக்கின்றன. பூமி மட்டுமே சூரியனில் இருந்து உயிர்கள் வாழ தகுந்த தூரத்தில் உள்ளது.
அதேபோல், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த 3 கிரகங்களும் அவை சுற்றி வரும் நட்சத்திரத்தில் இருந்து சரியான தூரத்தில் அமைந்துள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதனால், அங்கு மனிதர்கள் உயிர்வாழ்வதற்கான காற்று, நீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று நம்புகின்றனர். மேலும், பூமியை போன்றே மேற்பரப்பும் அடர்த்தியும் காணப் படுகிறது. மிகுந்த வெளிச்சத்துடன் உள்ள இந்த கிரகங்களை இரவில் வெறும் கண்களாலேயே காண முடியும் என்கின்றனர்.
ஸ்பெயினில் உள்ள தீவில் அமைக்கப்பட்டுள்ள ‘ஹார்ப்ஸ் -என்’ என்ற அதிநவீன தொலை நோக்கி மூலம் இந்த 3 கிரகங் களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.