இந்தியா

யூனியன் பிரதேசங்களான ஜம்மு-காஷ்மீர், லடாக்: புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டது மத்திய அரசு

செய்திப்பிரிவு

மத்திய அரசு சனிக்கிழமையன்று இந்தியாவின் புதிய வரைபடத்தை வெளியிட்டது. 28 மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட 9 யூனியன் பிரதேசங்கள் அடங்கிய புதிய அரசியல் வரைபடம் வெளியிடப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்துப் பிரிவான 370ம் பிரிவை மத்திய அரசு நீக்கி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றை யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.

அக்டோபர் 30-ம் தேதி நள்ளிரவில் அதிகாரபூர்வமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக மாறியது.

இந்நிலையில் மத்திய அரசு புதிய நிர்வாக எல்லைகளுடன் கூடிய புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT