இந்தியா

ஆந்திராவில் செம்மரம் கடத்த முயன்ற 19 பேர் கைது

செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் நேற்று காலை போலீஸார் நடத்திய சோதனையில் ரூ. 6.5 கோடி மதிப்புள்ள செம்மரங் கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தமிழகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 19 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கடப்பா மாவட்டம், தாசரபல்லி அணைகட்டு அருகே நேற்று காலை டி.எஸ்.பி. ராகுல் தேவ் உத்தரவின் பேரில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப் போது அந்த வழியாக வேகமாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 3.5 டன் எடையுள்ள114 செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவது தெரிய வந்தது. இவற்றை போலீஸார் வேனுடன் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.6.5 கோடி என போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் தமிழகத்தைச் சேர்ந்த வேலூர், சேலம் மற்றும் கடப்பாவை சேர்ந்த 19 பேரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT