காஷ்மீரின் பூஞ்சில் இந்திய பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் தரப்பில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ராணுவ வீரர் ஒருவர் மரணமடைந்தார்.
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று (புதன்கிழமை) மதியம் பாகிஸ்தான் தரப்பு வீரர்கள் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததால் பாகிஸ்தான் படையினர் பின்வாங்கினர்.
சில மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 முறை பாகிஸ்தான் வீரர்கள் இந்திய எல்லை பகுதியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பு துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் மரணமடைந்தார். மேலும் 2 வீரர்கள் காயமடைந்தனர்.