புதுடெல்லி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, உள்நாட்டு பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய காவலர் தலைமையகத்தை அமித் ஷா நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
ஒரு நாட்டின் வளர்ச்சியில் அதன் காவல்துறையின் பங்கு அளப்பரியது. பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட் டுக்கும் சட்டம் - ஒழுங்கு ஸ்திரமாக இருப்பது மிகவும் அவசியம். எனவே, காவல்துறையினர் தங்களின் முக்கியத்துவத்தை அறிந்து பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
காவல்துறையை சினிமா உள்ளிட்ட ஊடகங்கள் தவறாகவே சித்தரிக்கின்றன. மக்களுக்காக அவர்கள் செய்யும் தியாகங்கள் இருட்டடிக்கப்படுகின்றன. மிக அரிதாகவே அவை ஊடகங்களில் காட்டப்படுகின்றன. காவல்துறை குறித்த பொதுமக்களின் எண்ணம் மாற வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தி வரு கிறது. குறிப்பாக, உள்நாட்டு பாது காப்புக்கு மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவத்தை அளித்து வருகிறது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.
- பிடிஐ