இந்தியா

3 மாதங்களில் தெலுங்கில் பேசுவேன்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை உறுதி

செய்திப்பிரிவு

ஹைதராபாத்

மூன்றே மாதங்களில் தெலுங்கு மொழியை கற்றுக்கொண்டு பேசுவேன் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். ஹைதராபாத்தில் உள்ள முஷீராபாத் பகுதியில் கடந்த 3 நாட்களாக மகளிர் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதன் இறுதி நாளான நேற்று, பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:

மகளிர் தாங்கள் தேர்ந்தெடுக்கும் துறையை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு அதில் முன்னேற வேண்டும். எந்தவொரு துறையை தேர்வு செய்தாலும், அதில் நமது திறமையை வெளிப்படுத்த வேண்டும். மேலும், ஆரோக்கியத்திலும், சுகாதாரத்திலும் பெண்கள் அக்கறை செலுத்துவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முதலில் தெலுங்கில் பேசிய அவர், பின்னர் ஆங்கிலத்தில் உரையாற்றினார். அப்போது, இன்னும் மூன்றே மாதங்களில் தெலுங்கு மொழியில் பேசுவேன் என அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT