சென்னை
புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதியளித்தல் உள்ளிட்ட விவகாரங்களுக்காக தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் நவ.7-ம் தேதி கூடுகிறது.
2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. இதில் ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து முதலீடு செய்த பல் வேறு நிறுவனங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப் பட்டு வருகின்றன. இதற்கிடையே சில நிறுவனங்களின் விரிவாக்கத் திட்ட தொழிற்சாலைகளை முதல் வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இதுதவிர, கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடு களுக்கு முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன்மூலம் ரூ.8 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை தமிழகத்துக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தங் கள் மேற்கொள்ளப்பட்டன.
முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, வெளி நாட்டு நிறுவனங்களுக்கான அனு மதி உள்ளிட்டவை குறித்து அமைச் சரவை கூடி முடிவெடுக்கப்பட வேண்டும்.
அதன்படி, முதல்வர் பழனிசாமி தலைமையில் நவ.7-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடை பெற உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச் சர்கள், தலைமைச் செயலர் கே.சண்முகம், நிதித்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட முக் கிய துறைகளின் செயலர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
தொழில்துறை அனுமதிகளைத் தவிர, அரசின் புதிய திட்டங்கள் சிலவற்றுக்கும் அனுமதி அளிக்கப்படலாம். மேலும், கட்டுமானத் துறையினர் பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாகவும் முடிவெடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தேதி மாற்றம்
அமைச்சரவைக் கூட்டம் நாளை நடப்பதாக முதலில் தகவல் வெளியானது. நாளை சூரசம்ஹார திருவிழா நடப்பதால் அமைச் சரவைக் கூட்டம் நவ.7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.