இந்தியா

இந்திய அரசியல் தலைவர்களுக்கு காஷ்மீர் செல்ல அனுமதியில்லை, ஐரோப்பிய ஒன்றிய எம்.பி.க்களுக்கு அனுமதியா? - காங்கிரஸ் கேள்வி

செய்திப்பிரிவு

புதுடெல்லி, பிடிஐ
.
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 25 எம்.பி.க்கள் செவ்வாயன்று காஷ்மீருக்குள் சென்று அங்கிருக்கும் நிலவரங்களைப் பார்க்க அனுமதியளிக்கலாம் ஆனால் இந்திய அரசியல் தலைவர்கள் அங்கு செல்ல அனுமதி மறுப்பா என்று காங்கிரஸ் கட்சியினர் மோடி தலைமை பாஜக மீது பாய்ந்துள்ளது.

இது இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு பெரிய இழுக்காகும் என்று ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

இந்திய அரசியல் தலைவர்கள் காஷ்மீருக்குள் சென்று அங்குள்ள மக்களைச் சந்திக்க அனுமதிக்கவில்லை எனும்போது மார்தட்டும் இந்த தேசியவாத சாம்பியனுக்கு எது ஐரோப்பிய ஒன்றிய எம்.பி.க்களை காஷ்மீருக்குள் சென்று பார்க்க அனுமதியளித்தது? இது இந்திய நாடாளுமன்றத்துக்கும் இதன் ஜனநாயகத்துக்கும் இழைக்கப்படும் இழுக்காகும்.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் செய்துள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் இது தொடர்பாக விமர்சனம் வைக்கும் போது, “ஐரோப்பிய ஒன்றிய குழு காஷ்மீருக்குள் சென்று நிலவரங்களைப் பார்வையிட பாஜக அரசு அனுமதிக்கும் போது ஏன் இந்திய எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மட்டும் தடை? காஷ்மீருக்குள் செல்ல இந்திய தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டியுள்ள சூழ்நிலையில் ஐரோப்பிய யூனியன் குழுவினர் பிரதமர் அலுவலகத்தினரால் வரவேற்கப்படுகின்றனர். ஏன் சம பாவனை இல்லை?” என்றார்.

SCROLL FOR NEXT