வியாபம் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ள மத்தியப் பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் யாதவை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
வியாபம் ஊழல் வழக்கில் மத்தியப் பிரதேச ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது. அதைத் தொடர்ந்து நேற்று மாலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. அப்போது ஆளுநர் ராம் நரேஷ் யாதவை நீக்குவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தற்போது வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வரும் 13-ம் தேதி டெல்லி திரும்புகிறார்.
அதன்பின்னர் மத்தியப் பிரதேச ஆளுநர் குறித்து முடிவு செய் யப்படும் என்று டெல்லி வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.