இந்தியா

அமைதியான நாட்டுப்பற்று பலப்பிரயோக தேசியவாதத்தை தோற்கடிக்க முடியும்: ப.சிதம்பரம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி, பிடிஐ

பாஜக-வை தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் நம்ப வேண்டுமென்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அமைதியான நாட்டுப்பற்று பலப்பிரயோக தேசியவாதத்தை தோற்கடிக்க முடியும் என்று தொண்டர்களுக்கு உற்சாகமூட்டுமாறு அவர் பேசியுள்ளார். மக்கள் தங்கள் அச்சங்களைத் துறந்தால் அதிசயங்கள் நிகழ்த்த முடியும்.

தன் ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் தெரிவித்ததாவது,

“பாஜகவை தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்பதை காங்கிரஸார் நம்ப வேண்டும். அமைதியான நாட்டுப்பற்று பலப்பிரயோக தேசியவாதத்தை தோற்கடிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் திஹார் சிறையில் இருந்தார், தற்போது அமலாக்கப் பிரிவுக் காவலில் இருக்கிறார்.

மகாராஷ்டிரா, ஹரியாணாவில் சில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறியது போல் ஒட்டுமொத்த பாஜக கூட்டணி வெற்றியாக இல்லாமல் பாஜகவின் சில இடங்களை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகளும் பறித்துள்ளனர்.

SCROLL FOR NEXT