இந்தியா

கேரள இடைத்தேர்தல்: காங்கிரஸ் பாரம்பரிய தொகுதிகளை கைபற்றிய இடதுசாரி கூட்டணி

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்

கேரள சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வட்டியூர்காவூ, கோனி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளை ஆளும் இடதுசாரி கூட்டணியிடம் காங்கிரஸ் பறிகொடுத்தது.

பல்வேறு மாநிலங்களில் 2 மக்களவை, 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.பிஹாரின் சமஸ்திபூர் மக்களவைத் தொகுதி, மகாராஷ்டி ராவின் சடாரா மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இடைத் தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வட்டியூர்காவூ, கோனி, எர்ணாகுளம், அரூர், மல்லேஸ்வரம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் வட்டியூர்காவூ, கோனி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளை ஆளும் இடதுசாரி கூட்டணியிடம் காங்கிரஸ் பறிகொடுத்தது.

அதேசமயம் இடதுசாரி கூட்டணி வசம் இருந்த அரூர் தொகுதியை காங்கிரஸ் கைபற்றியுள்ளது. ஏற்கெனவே வென்ற எர்ணாகுளம் தொகுதியில் காங்கிரஸ் வென்றுள்ளது. மல்லேஸ்வரம் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் வென்றுள்ளது. இந்த தொகுதியில் பாஜக 2-ம் இடம் பிடித்துள்ளது.

வட்டியூர்காவூ வழக்கமாக காங்கிரஸ் வெல்லும் தொகுதி. அதுபோலவே கோனி காங்கிரஸ் அதிகம் செல்வாக்குடன் விளங்கும் கோனி தொகுதி. இந்த இரண்டு தொகுதிகளையும் கைபற்றியதால் இடதுசாரி கூட்டணி மகிழ்ச்சியடைந்துள்ளது.

SCROLL FOR NEXT