இந்தியா

மக்களவைத் தேர்தல் முடிவு: சடாராவில் தேசியவாத காங்கிரஸ்- சமஸ்திபூரில் லோக் ஜனசக்தி முன்னிலை

செய்திப்பிரிவு

புதுடெல்லி
மக்களவைத் தேர்தல் முடிவு: சடாராவில் தேசியவாத காங்கிரஸூம், சமஸ்திபூரில் லோக் ஜனசக்தியும் முன்னிலை பெற்றுள்ளன.

பல்வேறு மாநிலங்களில் 2 மக்களவை, 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.பிஹாரின் சமஸ்திபூர் மக்களவைத் தொகுதி, மகாராஷ்டிராவின் சடாரா மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

மகாராஷ்டிராவில் சில மாதங்களுக்கு முன்பு கடந்த மக்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.பி.யாக தேர்வானவர் உதயன்ராஜே போஸ்லே.மூன்றே மாதங்களில் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார். மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் குடும்பப் பரம்பரையில் வந்தவர் உதயன்ராஜே போஸ்லே.

இந்தநிலையில் அங்க வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், சடாரா மக்களவைத் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. அந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட உதயன் ராஜனே போஸ்லே பின்னடைவை சந்தித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீனிவாச பாட்டீல் முன்னிலை வகித்து வருகிறார்.

சமஸ்திபூர் மக்களவைத் தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பில் போட்டியிட்ட லோக் ஜனசக்தி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. அங்கு ராஷ்ட்ரீிய ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பின்தங்கியுள்ளார்.

SCROLL FOR NEXT