இந்தியா

அனைத்து உயிர்களும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்: சம்ஸ்கிருதத்தில் பாடகி லேடி காகா ட்வீட்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

உலகில் உள்ள அனைத்து உயிர் களும் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று ட்விட்டரில் சம்ஸ்கிருதத்தில், அமெரிக்க பாப் பாடகி லேடி காகா பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த லேடி காகா புகழ்பெற்ற பாப் பாடகியாவார். உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் ட்விட்டரில் ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தார். அதில் ‘லோகோ சமஸ்தா சுகினோ பவந்து’ என்று குறிப்பிட்டிருந்தார். இது புரியாமல் அவரது ரசிகர்கள் விழித்துக்கொண்டிருந்தனர். பின்னர் அது சம்ஸ்கிருத மொழி யில் எழுதப்பட்ட வாசகம் என்பது அவரது ரசிகர்களுக்குத் தெரிய வந்தது.

அதில் அவர் கூறியிருப்ப தாவது: உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்கட்டும், மேலும் எனது சொந்த வாழ்க்கை யின் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் அனைவருக் கும் மகிழ்ச்சியையும், சுதந்திரத்தையும் பங்களிக்கட்டும் என்ற அர்த்தத் தில் அவர் கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

இதையடுத்து ட்விட்டரில் அவருக்கு ஏராளமானோர் வாழ்த் துகளைத் தெரிவித்து வருகின்ற னர். மேலும் ட்விட்டரில் லேடி காகாவின் கருத்துக்கு அதிக அளவில் வரவேற்பு காணப்பட்டது.

SCROLL FOR NEXT