இந்தியா

தெலுங்கு தேசம் எம்எல்ஏ சிறையிலடைப்பு

பிடிஐ

தெலங்கானா மேலவைத் தேர்தலில் வாக்களிக்க லஞ்சம் அளித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தெலுங்குதேசம் எம்எல்ஏ வெங்கட வீரய்யா நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

தெலங்கானா மேலவைத் தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதர வாக வாக்களிக்க நியமன எம்எல்ஏ எல்விஸ் ஸ்டீவன்சனுக்கு லஞ்சம் வழங்க முயன்றதாக தெலுங்கு தேசம் எம்எல்ஏ ரேவந்த் ரெட்டி கைது செய்யப் பட்டார். அண்மையில் அவர் ஜாமீனில் விடுதலையானார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சி யைச் சேர்ந்த சத்தபல்லி எம்எல்ஏ வெங்கட வீரய்யா நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார்.

ஹைதராபாத் நீதிமன்றத்தில் நேற்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து செர்லாபள்ளி சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT