புதுடெல்லி
ஹரியாணா, மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுடன் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 51 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கும், 2 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
பிஹாரில் சமஸ்திபூர் மக்களவைத் தொகுதிக்கும், மகாராஷ்டிராவில் சடாரா மக்களவைத் தொகுதிக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதேபோல் உத்தரபிரதேசத்தில் 11 சட்டப் பேரவைத் தொகுதிகள், பஞ்சாப், அசாம் மாநிலங்களில் தலா 4, தமி ழகம், ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2, ஒடிசா, தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மேகாலயா, புதுச்சேரி, அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்தத் தொகுதிகளிலும் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. பிரச்சாரம் ஓய்ந்ததைத் தொடர்ந்து நாளை (21-ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
வாக்குச்சாவடிகளில் ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குசாவடிகளுக்கு கொண்டு செல்லபட்டு வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலையொட்டி மகாராஷ்டிரா, ஹரியாணா உட்பட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி 2 லட்சம் மாநில போலீஸாரும், சிஐஎஸ்எப், மத்திய ரிசர்வ் போலீஸ், நாகாலாந்து பெண் போலீஸ் படை களைச் சேர்ந்த ஒரு லட்சம் போலீ ஸார் என மொத்தம் 3 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடு கின்றனர்.
24-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன.