இந்தியா

அவசர சட்டம்: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

பிடிஐ

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை எதிர்த்து தொடரப் பட்டுள்ள வழக்கு குறித்து பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

நிலம் கையகப்படுத்தும் சட்டம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. கடந்த 2014 மே மாதம் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு அந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

இதுதொடர்பான நிலம் கையகப்படுத்தும் திருத்த மசோதா மக்களவையில் நிறை வேற்றப்பட்டுவிட்டது. ஆனால் மாநிலங்களவையில் அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் தொடர்ந்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு 3வது முறையாக நிலம் கையகப்படுத்தும் இந்த அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் அவசர சட்டத் துக்கு தடை விதிக்கக் கோரி பல்வேறு விவசாயிகள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் கெல்கர், ஆதர்ஷ்குமார் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இம்மனு தொடர்பாக 4 வாரங்களில் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT